என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை (Ennodu neer sonna varthaigalai)

Pr.Davidsam Joyson

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர்

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்

1.நீர் அனுப்பின வார்த்தைகள்
ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
உம் விருப்பத்தை நிறைவேற்றுமே

2.நீர் பொய் வார்த்தை சொல்லிட
மனதும் மாறிட மனிதன் அல்லவே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
தவறாமல் நிறைவேறுமே

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றினீர்