என் ஆத்துமா பாடும் என் இதயம் துதிக்கும்
என் ஆத்துமா பாடும், என் இதயம் துதிக்கும்
என் உதடுகள் போற்றும், இயேசு நல்லவர்
ஆ… அல்லேலூயா (3) அல்லேலூயா(2)
சேற்றிலிருந்த என்னை
கரத்தால் தூக்கி எடுத்தார்
நாற்றமெல்லாம் மாற்றினார
இரத்தத்தாலே கழுவினார்
இயேசுவே என் ஆண்டவர்
இயேசுவே என் இரட்சகர்
இயேசுவே என் மீட்பர்
இயேசுவே என் ராஜா –என் ஆத்துமா பாடும்
தள்ளப்பட்ட என்னையும்
தலைக்கல்லாய் மாற்றினார்-
மகிமையாலே நிரப்பினார
பயன்படுத்தி வருகிறார்
இயேசுவே என் ஆண்டவர்
இயேசுவே என் இரட்சகர்
இயேசுவே என் மீட்பர்
இயேசுவே என் ராஜா –என் ஆத்துமா பாடும்
கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சி அடையேன்
இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்
இயேசுவே என் ஆண்டவர்
இயேசுவே என் இரட்சகர்
இயேசுவே என் மீட்பர்
இயேசுவே என் ராஜா – என் ஆத்துமா பாடும்