எழும்பி பிரகாசி|Ezhumbi pragaasi

Bro.Joseph Aldrin

எழும்பி பிரகாசி என் மகனே(ளே) – (ஏசாயா 60:1)
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது

நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய் –(ஏசாயா 60:15)
ஒருவரும் கடந்து நடவாததாய்
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்
அலங்கரிப்பாரே உன்னை

சூரியன் வெளிச்சம் தரவில்லையோ – (ஏசாயா 60:20)
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
தேவனே உனக்கு மகிமை

பூமியையும் இருள் மூடியதோ – (ஏசாயா 60:2)
ஜனங்களை காரிருள் மூடியதோ
மகிமை உன்மேல்
வெளிச்சமே நீ தான்
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்

எழும்பி பிரகாசி எதிர்காலமே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது