பதறிடாதே கலங்கிடாதே
பதறிடாதே கலங்கிடாதே
பரமன் இயேசு பாரில் உண்டே
தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்
ஆண்டவரும் மறப்பாரோ
தகப்பன் பிள்ளை இரங்குவதுபோல்
அனுதினமும் இரங்குவார் – பதறிடாதே
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கி உன்னை சுமப்பாரே
வழிவிடாமல் காக்கும் தேவன்
மாசற்றோராய் நிறுத்துவார் – பதறிடாதே
ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும் மேலாய்
ஜெயமே அளிப்பவர்
அறியா எட்டா காரியங்கள்
அனுதினமும் அறிவிப்பார் – பதறிடாதே
உனக்காய் யுத்தம் செய்திடுவார்
உனக்காய் பரிந்தும் பேசுவார்
உனக்குமுன்னே அவரின் சமூகம்
உனக்காய் யாவும் செய்திடும் – பதறிடாதே
Leave a Reply