Arul Eralamai peiyum

அருள் ஏராளமாய் பெய்யும்

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
திரளலாம் மிகுதியே

அருள் ஏராளமாம் அருள்

அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமூண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரீப்புமாம்

அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
இறங்கி தங்கிடுமேன்

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இக்ஷணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே