Karthar En Meypparaai

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

  1. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
    ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
    மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
    தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

2. மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

3. சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

4.ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்