தேவனே நான் உமதண்டையில்
Rev.V. Santiago (வி. சந்தியாகு)
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
Dhevane naan umathandaiyil – innum nerungi
servathe en aaval boomiyil
maavaliya goramaaga vansiluvai meethinil naan
kovae thonga neridinum
aavalaai um andai serven
- யாக்கோபைப்போல், போகும் பாதையில் .. பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – (தேவனே, நான்)
Yaakobaipol pogum padhaiyil.. pozhuthu pattu
Raavil irul vandhu moodida
Thookathaal naan kallil saainthu thoonginaalum en kanaavil
Nokkiummai kitti serven vaakkadangaa nalla naatha ( Dhevane naan)
- பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, எந்தன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – (தேவனே, நான்)
Parathukkerum padigal polave – en paadhai thondra
Pannumaiya enthan dhevane
Kirubaiyaaga neer enakku tharuvathellam umathandai
Arumaiyagha ennaiazaithu anbin thotthanaga seyyum ( Dhevane naan)
- நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் (தேவனே, நான்)
Niththiraiyindru viliththu – kaalai ezunthu
Karththaavae, naan ummai pottruvaen;
Iththaraiyil unthan veedaai enthuyark kal naattuvaenae,
Enran thunpaththin vaziyaai innum ummaik kittich servaen ( Dhevane naan)
- ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – (தேவனே, நான்)
Aananthamaam settai viriththup – paravasamaay
Aakaayaththil yerip poyinum
Vaana manndalang kadanthu paranthu melae senridinum
Makilvuru kaalaththilum naan maruviyummaik kittich servaen ( Dhevane naan)