Nandriyal Thuthi Paadu

நன்றியால் துதிபாடு

Fr.S.J.Berchmans. Jebathotta Jeyageethangal

நன்றியால் துதிபாடு
நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு (2)
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2) – நன்றியால்

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2) – நன்றியால்

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2) – நன்றியால்

4. துன்மார்க்கத்திற்கேதுவான வெறிக் கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே (2)
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு (2) – நன்றியால்

5. சரீரம் ஆத்துமா ஆவியினாலும்

சோர்ந்து போகும் வேளையில் எல்லாம் (2)
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் (2) – நன்றியால்