ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம்
ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா (2)
சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு – (2)
(..ஓயாமல் துதிப்போம்)
கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு – (2)
(..ஓயாமல் துதிப்போம்)
விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு – (2)
(..ஓயாமல் துதிப்போம்)
Leave a Reply