Aanandhamaai naame aarparipom- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே – அல்லேலூயா

கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் …(ஆத்துமமே என்)

படகிலே படுத்து உற்ங்கினாலும்
கடும்புயல் அடித்துக் கவிழ்த்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தியெமை
காத்தாரே அல்லேலூயா …(ஆத்துமமே என்)

யோர்தானை கடந்தோம் அவர் பெலத்தால்
எரிக்கோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் …(ஆத்துமமே என்)

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார் …(ஆத்துமமே என்)