இயேசு நல்லவர் – நம் இயேசு
இயேசு நல்லவர் – நம்
இயேசு பெரியவர்
இயேசு உன்னதர்
சர்வலோகத்தின் ஆண்டவர்
நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர
வியாதியால் வருந்திடும் உனக்கு
சுகம் தரும் தெய்வம் நம் இயேசு
சாபங்கள் யாவையும் நீக்கி – உன்னை
வாழவைக்கும் தெய்வம் இயேசு
மரண பயம் சூழ்ந்த உன்னை
விடுவிக்க வல்லவர் இயேசு
இருண்டு போன உந்தன் வாழ்வில் –ஜீவ
ஒளியை ஏற்றுவார் இயேசு
ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்
புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு
தோல்வியை சந்தித்த உனக்கு
ஜெயத்தைத் தருபவர் இயேசு
Leave a Reply