பெலனும் அரணும் என் கேடகமும்
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2
யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2
தேவன் சகாயர் எனக்கு
எவருக்கும் அஞ்சிடேனே
ஒருபோதும் என்னை விட்டு
விலகுவதில்லை தேவன் – 2 (யெஹோவா ஷம்மா..)
பயமின்றி துணிந்து நானும்
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே பெலனும் கொண்டு
மதிலையும் தாண்டிடுவேன் – 2 (யெஹோவா ஷம்மா..)
உம்மையே நம்பும் எனக்கு
நித்திய கன்மலை நீர்
உம்மையே நோக்கிடும் நான்
வெட்கம் அடைவதில்லை – 2 ((யெஹோவா ஷம்மா..)
Leave a Reply