Naam Aradhikum Devan

நாம் ஆராதிக்கும் தேவன்

நாம் ஆராதிக்கும் தேவன்
அவர் ஜீவனுள்ள தேவன்
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நம் தேவன் – அவர்

ஆபிரகாம் விசுவாசித்தான்
நீதிமானின் ஆசிகள் பெற்றான்
விசுவாச மார்க்கத்தாலே
ஆபிரகாமின் பிள்ளைகளாய்
ஆசிகளை சுதந்தரிப்போம்

ஈசாக்கு விதை விதைத்தான்
நூறத்தனை ஆசிகள் பெற்றான்
பரலோக பலங்களை மகிமையாய் அடைந்திட
மகிழ்வுடன் பிழைத்திடுவோம்

யாக்கோபு வேண்டுதல் செய்தான்
உயிர் பிழைத்திட ஆசிகள் பெற்றான்
விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுக
ஆசிகளை அடைந்திடுவோம்