Visuvasathinal Neethiman Pizaipan

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே – 2
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே – 2

  • தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
    பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
    நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
    சொந்த கரங்களால் அணைத்துக்கொள்வார்
  • பிறர் வசை கூறி துன்புறுத்தி
    இல்லாதது சொல்லும்போது
    நீ மகிழ்ந்து களிகூரு
    விண் கைமாறு மிகுதியாகும்
  • கொடும் வறுமையில் உழன்றாலும்
    கடும் பசியினில் வாடினாலும்
    அன்று எலியாவை போஷித்தவர்
    இன்று உன் பசி ஆற்றிடாரோ