Vizhithelu Visuvasiyae

விழித்தெழு விசுவாசியே

விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

  • எருசலேமின் அலங்கத்தைப் பார்
    தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
    நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
    விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு
  • பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
    ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
    பாவியின் சாவை கூவி உரைக்கும்
    ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு
  • அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
    அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
    அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
    தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு