அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்
- அழியும் ஜனத்தின் அழுகுரல்
அன்பரே என்னையும் உருக்காதோ
மாளுவோரை மீட்க வந்தவரே
மாண்டிடும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் என்னையும்
ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் - நல்ல போராட்டத்தை போராடி
ஓட்டத்தை முடிக்க உதவுமே
உம்மோடு பாடு சகிக்கவும்
உம நாமத்திற்க்காக மரிக்கவும்
ஆயத்தமே நானும் இப்போ
ஆண்டவரே என்னை ஏற்றுக்கொள்ளும் - அன்பு கூறுவோர்க்கு தேவன் தம்மில்
ஆயத்தம் பண்ணினவைகளை
ஆவியானவரை நானும் காண
திறந்தருளும் என் கண்களை
அல்லேலுயா கீதம் பாடி
ஆண்டவரே உம்மை தொழுகிறேன்