Eva. Augustine Jebakumar
கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை
வைத்து கரங்களின் கீழே
அடங்கிடுவேன் கடினபாதையோ
கஷ்ட துக்கமோ கரம் பிடித்தென்றும்
நடந்திடுவேன்
- என் நினைவுகள் எல்லாம் உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம் வெறுமையாய் திரும்பவில்லை
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ – (2) - கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோன்
காலை தள்ளாட வொட்டா காக்கிறவர் உறங்கார் அவர்
வலது பக்கத்தில் நிழலாயிருக்கின்றாரே – (2) - எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே
என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றேன் – (2)