Manthayil sera aadugale

மந்தையில் சேரா ஆடுகளே

Dr.N.Emil Jebasingh

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே……

அழைக்கிறார் இயேசு…..
அவரிடம் பேசு…..நடத்திடுவார்……

  1. காடுகளில் பல நாடுகளில் என்
    ஜனம் சிதறுண்டு சாகுவதா
    பாடுபட்டேன் அதற்காகவுமே
    தேடுவோர் யார் என் ஆடுகளை!
  2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு -எனை
    அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
    அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
    இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்!
  3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் – என்னைப்
    போல் அலைந்திட கால்கள் வேண்டும்
    என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
    இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்