Irandayiram aandagiyum India( இரண்டாயிரம் ஆண்டு ஆகியும்)

Bro. Augustine Jebakumar ( GEMS , Bihar)

இரண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே -2
இப்பூவி இயேசுவை அறியலையே – 2 இன்றைய விசுவாச கூட்டமும்
இன்பத்தை தேடி அலைகின்றதே – 2

  1. பொருளாசை என்னும்
    அரக்கனும் பொலிவுடனே
    மனதினை ஆள்கின்றதே – 2
    பொல்லாப்பு செய்யும் கைகளும்
    பொய் தீர்க்கதரிசனமும் பெருகிடுதே – 2

இரண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே

  1. கள்ளரின் உபதேச புரட்டலும்
    கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே – 2
    கல்வாரி நாயகனின் கதறலும்
    கவனிப்பாரற்று போகிறதே – 2
  2. அன்புகூற ஆளைத்
    தேடுவோரை அசைத்திடும்
    அகிலத்தின் சபைகளையே – 2
    அழைப்பின் சத்தம் கேட்டிடுவோம்
    அர்பணிப்போம் அவர் தம் பணிக்கெனவே – 2
  3. தேவனே இறங்கிட மாட்டீரோ
    தேசம் உம்மை அறியனுமே – 2
    தேவை இன்றே புறப்படுவோம்
    தேடுவோம் காணாமல் போனவரை – 2