இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் (இயேசுவின் நாமம்)
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம் (இயேசுவின் நாமம்)
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் (இயேசுவின் நாமம்)
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் (இயேசுவின் நாமம்)
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் (இயேசுவின் நாமம்)
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம் (இயேசுவின் நாமம்)
Leave a Reply