Vaanaathi vaanangal kollathavarea- வானாதி வானங்கள் கொள்ளாதவரே

Princy Leo Rakesh /Leo Rakesh

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே
ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே என்றுமே என்றென்றுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும் என் அருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

விலகாதா பிரியாத உம் சமூகமே
அது தானே நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும் எப்போதும் நீர் போதுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (16)