Ummai Nambi nadakiren- உம்மை நம்பி நடக்கிறேன்

Pr.Davidsam Joyson

உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்

நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை

  1. தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
    அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -(2)
    செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
    அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் – (2) – உம்மை நம்பி
  2. அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
    புரியாத (தெரியாத) பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர் – (2)
    இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
    தீமையை நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர் – (2) – உம்மை நம்பி