En athmavum sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்

Fr.S.J.Berkmans

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்லா
என்னில் இயேச வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

  1. அப்பா உம் திருசித்தம் – என்
    அன்றாட உணவையா
    நான் தப்பாமல் உம் பாதம்
    தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
  2. கர்த்தாவே உம் கரத்தில்
    நான் களிமண் போலானேன்
    உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
    என்னை எந்நாளும் நடத்திடும்