Enakkaen ini bayamae- எனக்கேன் இனி பயமே

Sr.Saral Navaroji

எனக்கேன் இனி பயமே
எந்தன் இயேசு என் துணையே
என் துன்ப நேரத்திலே
இயேசுவே என்னோடிருப்பார்

கடந்த வாழ் நாட்களெல்லாம்
கர்த்தரே என்னை சுமந்தார்
கண்ணீர் யாவையும் துடைத்தார்

உண்மையாய் என்னையும் நேசித்தார்
உள்ளங்கையில் என்னை வரைந்தார்
அவர் அறியாதொன்றும் வந்ததில்லை
அவரையே சார்ந்து கொண்டேன்

கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார்
விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
விரும்பி என்னை அணைத்தார்

யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்
யோர்தான் நதி புரண்டு வந்தும்
எலியாவின் தேவன் என் ஜெபங்களை
ஏற்று பதில் அளித்தார்

இத்தனை அற்புத நன்மைகள்
கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
இதுவரை வழிகாட்டி நடத்தினார்
இன்னமும் காத்திடுவார்

உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில்
மேன்மை பாரட்டுகிறேன்