Akkiniyil nadanthu vanthom

அக்கினியில் நடந்து வந்தோம்

Pr. Reegan Gomez

  1. அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
    தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா

உங்க கிருபை எங்களை விட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா – 2

எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் – 2

  1. செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்

கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்றுவிட்டீர் – 2 – எங்கள் தேவன்

  1. பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோம் ஐயா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்

எங்கள் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்து விட்டீர் – 2 – எங்கள் தேவன்

  1. வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உந்தன் மகிமைதனைக் காண்போம்

எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – எங்கள் தேவன்