அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம்பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவர்க்கு அல்லேலூயா
தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களிகூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே
தோல்வியெல்லாம் துதிகளினாலே
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தேல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே
இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா
ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே