Anbe pradhanam sagothara

அன்பே பிரதானம் சகோதர

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்