Athikalayil balanai thedi – அதிகாலையில் பாலனை தேடி

Dr. Anand Chellappa

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தெய்வ பாலனை பணிந்திட வாரீர்

அதிகாலையில் பாலனை தேடி
வாரீர்.. வாரீர்.. வாரீர்..
நாம் செல்லுவோம் (2)

1.அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க -(அதிகாலையில் )

2.மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே -(அதிகாலையில் )