Bakthare Vaarum Aasai

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

  1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
    நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை;
    வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.

  1. தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி,
    மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
    தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்;
  2. மேலோகத்தாரே,மா கெம்பீரத்தோடு
    ஜென்ம நற்செய்தி பாடிப்போற்றுமேன்;
    விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்!
  3. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,
    புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
    தந்தையின் வார்த்தை ,மாம்சம் ஆனார் பாரும்.