பெலனில்லா நேரத்தில் புது பெலன்
Pr.Gersson edinbaro
பெலனில்லா நேரத்தில் புது பெலன்
தந்து என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே – (2)
பெலன் தாருமே பெலன் தாருமே உம்
பெலத்தால் என்னை நடத்திடுமே – (2)
எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்து போய் நிற்கின்றேனே
மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும் – பெலன்
போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே – பெலன்
மனிதர்களின் நிந்தனையால்
மனம் நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே – பெலன்
மாம்சம் எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன்
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே – பெலன்