Deva janamae paavathil vizunthe(தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே)

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே என் யேசுவே
தேடி மீட்டிடுமே ( 2)

  1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
    ஆடம்பரம் நிறைந்தே (2) – பின்மாறின
    மங்கும் திரிகளெல்லாம் அணையுதே
    மனமிறங்கிடுமே (2) தேவ ஜனமே
  2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே
    சிநேகம் உலகினிலே – செலுத்தினர்
    ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே
    ஜோதி மங்கிடுதே (2)தேவ ஜனமே
  3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
    மந்தையைக் கலக்கி (2)– வஞ்சிக்கவே
    தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
    தவறி செல்கின்றனர் – – தேவ ஜனமே
  4. நல் விசுவாசம் காணப்படுமோ
    நேசர் வருகையிலே (2) – எப்படியும்
    உந்தன் மணவாட்டி சபைதனை
    உயிர்பித்தே அழைத்தீர் – தேவ ஜனமே