தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத்தவர் நீர் அருளுகின்றார்- (தேவ பிதா)
- ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார் -(தேவ பிதா)
2. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும் -(தேவ பிதா)
3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் -(தேவ பிதா)
- ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் (தேவ பிதா)