எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே
Lyrics : Pastor Gabriel Thomasraj
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே, இருப்பவரே,
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே, நிறைப்பவரே;
ஸ்தோத்திரமே, ஸ்தோத்திரமே, மறவாமல் செலுத்துகிறேன் -(2)
உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்,
உயிர் உள்ளவரை துதிப்பேன் -(2)
1) தகப்பனாக இதுவரையும்,
தோளின் மீதே சுமந்து வந்தீர் -(2)
தந்தையே உம் தயவால்,
தாண்டினேன் வனாந்திரத்தை -(2) …(ஸ்தோத்திரமே)
2) அறண்ட வேளை அன்னையைப்போல்,
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர் -(2)
இருளெல்லாம் விலக்கினீரே,
அழுகையை நிறுத்தினீரே -(2) …(ஸ்தோத்திரமே)
3) தனிமையிலே (ஒரு) நண்பனைப்போல்,
நெடுந்தூரமும் உடன் நடந்தீர் -(2)
அனாதையாய் அலைந்ததில்லை,
அன்பர் நீர் அருகினிலே -(2) …(ஸ்தோத்திரமே)
4) குயவனாக வனைந்திட்டீரே,
களிமண்ணையே கிருபையாலே -(2)
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே -(2) …(ஸ்தோத்திரமே)