En Iyalaamaiyil neer seyal

என் இயலாமையில் நீர் செயல்படுவீர்

Lyrics : Timothy Sharan

  1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
    உம் கரம் என்னை விலகாதிருக்கும் -2

மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்

கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

  1. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
    உம்மால் அன்றி இது யாரால் கூடும் -2

ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!

கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா