En Meetpar Ratham

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

Freddy Joseph

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

  1. கார் மேகம் அவர் முகத்தை
    மறைக்கும் காலம், அவரை
    எப்போதும்போல நம்புவேன்,
    மாறாதவர் என்றறிவேன்;
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.
  2. மரண வெள்ளம் பொங்கினும்,
    என் மாம்சம் சோர்ந்து போயினும்,
    உன் வாக்குத்தத்தம் ஆணையும்
    என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
    நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.
  3. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
    எக்காள சத்தம் கேட்கையில்,
    அஞ்சேன் என் மீட்பர் நீதியே
    அநீதன் என்னை மூடுமே;
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.