Enna thiyagam en kalvaari naayakaa

என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!

என்ன தியாகம் என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!

  1. விண் தூதர் போற்றிடும் – உம்
    பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே,
    மாட்டுக் கொட்டிலை வாஞ்சித்தீரையா!
    மானிடர் மேல் அன்பினால்!
  2. ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
    ஜீவனை ஈயும் வரை
    பாடுகள் யாவையும் பட்டீரையா!
    பாவியை மீட்பதற்காய்
  3. தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
    ஸ்தலமோ எங்குமில்லை !
    உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
    முன் பாதை காட்டினீரே
  4. தாய், தந்தை, வீடும், நாடும் – தனக்குள்ள
    இஷ்டத்தையும் வெறுத்து,
    அப்போஸ்தலர், சீஷரும் குருசை
    அனுதினம் சுமந்தாரல்லோ!
  5. பாடுகெல்லாம் உம்மை – மகிமையில்
    பூரணமாய்ச் சேர்த்ததே:
    உம்மோடு நானும் பாடு சகிக்க
    என்ன தடையுமுண்டோ ?
  6. பொய் இன்பம் எனக்கினியேன் – என்னருமை
    இயேசுதான் என் பங்கல்லோ!
    நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
    நேச வலிமையினால்