என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்துவிட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன் – 2
1.எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே – 2
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர் – 2 (.. என்னால் ஒன்றும்)
2.யெகோவா யீரே எல்லாம்
பார்த்துக்கொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பலன் தருவார் – 2
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார் – 2 (.. என்னால் ஒன்றும்)
- எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே -2
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார்-2 (.. என்னால் ஒன்றும்)