எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்