Ethanai ethanai innalgal

Pr. Johnkish

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன -(2)

இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன்.

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.

ஆ, …. அ அ ஆ, …. அ அ ஆ,
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, …. அ அ ஆ,
ஆ, …. அ அ ஆ. -(2)

1) வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன்,
கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்;
சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன்,
கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்;

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;

2) தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று -(2)
சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்;
சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன்,
தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்;

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன;

ஆ, …. அ அ ஆ, …. அ அ ஆ,
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ, ஆ, …. அ அ ஆ,
ஆ, …. அ அ ஆ. -(2)