Ezhuputhalea engal vaanjai

எழுப்புதலே எங்கள் வாஞ்சை

Eva Wesley Maxwell

எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்

அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே – 2
அனலாய் கொழுந்து விட்டெரிய
அக்கினியால் என்னை நிரப்பும் – 2

இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே – 2
இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும் – 2

எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம் – 2
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் இயேசுவைக் காண வேண்டும் – 2

எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும் – 2
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும் – 2