Pr.OneDay Moses
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு..
கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் (2)
- புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு - அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அனுகது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே - அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

