Kaalaiyum Maalaiyum Evvelaiyum

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

  • கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
    கிருபையாய் இரட்சிப்புமானவர்
    அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
    அனுதினம் வாழ்ந்திடுவேன் (..காலையும் மாலையும்)
  • எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி
    என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
    பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
    பாதையில் நடத்திடுவார் (..காலையும் மாலையும்)
  • ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
    என்றும் தம் மகிமையைக் காண
    ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
    வாஞ்சித்து (..காலையும் மாலையும்)
  • தகப்பணும் தாயும் கைவிட்டாலும் என்
    கர்த்தர் என்னை சேர்த்துக்கொள்வார்
    எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக கர்த்தருக்கே
    என்றென்றும் காத்திருக்கும் (..காலையும் மாலையும்)
  • எனக்காக யாவும் செய்து முடிப்பார்
    என் கர்த்தர் வாக்கு மாரிடார்;
    தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
    தவறாமல் நிறைவேற்றுவார் (..காலையும் மாலையும்)