காலமோ செல்லுதே
Paul Asir Lawrie ( Translated from Jim Hill’s ” What a day that will be”)
காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே (2)
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும் (2)
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள், பாக்ய நாள்
கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
– மகிமையில்
தும்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
வியாதியெல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால் (2)
– மகிமையில்
வாழக்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய் (2)
ஓட்டத்தை முடிக்க
காத்துக்கொள் விசுவாசத்தை ( 2)
– மகிமையில்
உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமே
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம்
– மகிமையில்