Ketidum satham – கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்

Bro. Emil JebaSingh

கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்
ஆத்தும நேசரின் காலடிகள்
பகலினில் வெயிலில் இரவினில் நிலவில்
நாளெல்லாம் கேட்டது காலடிகள் – (2) – கேட்டிடும்

  1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ
    திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை – (2)
    வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன்
    நேசரில்லை, காலடிகள் – கேட்டிடும்
  2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன்
    சேர்ந்த இடம் அதோ கல்வாரியே – (2)
    பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது
    கல்வாரியே! காலடிகள் – கேட்டிடும்