Kirubaiyinale meetkappattaen( கிருபையினாலே மீட்கப்பட்டேன்)

கிருபையினாலே மீட்கப்பட்டேன்
அன்பினாலே அணைக்கப்பட்டேன்
தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்
கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன்

இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம் – (2)
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம் – (4)

1.சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன் – (2)
சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன் – (2 ) -( இரத்தத்தால் )

  1. வார்த்தையினாலே வாழ்வு பெற்றேன்
    வல்லமையாலே நிரப்பப்பட்டேன் – (2 )
    அழிவில்லாத வசனத்தினாலே
    ஆசீர் அனைத்தும் அருளப் பெற்றேன் – (2) – ( இரத்தத்தால் )