மண்ணோரை மீட்டிடவே பாரில்
மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாகினார் (2)
- தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம் - மண்ணில் கொடிய இருள் நீங்க
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளிவிளங்க
மன்னர் மூவர் தேடி வந்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்