மறைவிடமாம் எனக்கேசு உண்டு
மறைவிடமாம் எனக்கேசு உண்டு
மறைத்திடுவார் என்னை சிறகடியில்
மறந்திடார் நிதம் என்னை நினைத்திடுவார்
மாறாத இயேசெந்தன் அருகில் உண்டு – 2
- அனுதினமும் கிருபையினால்
அவரே எந்தன் முன்மாதிரியாய் – 2
ஆனந்த ஜீவிய வழியில் என்னை
அனுதினமும் அவர் நடத்திடுவார் – 2 - அழைத்த தேவன் உண்மையானவரல்லவோ
வழியில் நான் வழி தப்பி போகா வண்ணம் – 2
வருகைமட்டும் என்னை பிரியாவண்ணம்
வலது கை பிடித்தென்னை நடத்திடுவார் – 2 - இதோ வேகம் நான் வானவீதியில்
இனியும் வருவேன் என்று அருளி சென்றார் – 2
இன்ப நாதனை நானும் காணும் வண்ணம்
இரவும் பகலும் எண்ணி வாழ்ந்திடுவேன் – 2