Aviyanavare Anbin Aviyanavare

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே  (..ஆவியானவரே)

பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே (..ஆவியானவரே)

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே (..ஆவியானவரே)

நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே (..ஆவியானவரே)

ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே(..ஆவியானவரே)