Naan Orupodhum Unnai kaividuvathillai

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
என்றுறை செய்தேனன்றோ -2
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை –2 …. நான் ஒருபோதும்

  1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
    என்ன வந்தாலும் பயமே இல்லை
    மாறாத இயேசு உண்டெனக்கு
    மனது ஒருபோதும் கலங்கவில்லையே
    ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
    புயலில் என் கன்மலையே -2 (…என்றுறை செய்தவரை)
  2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
    தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
    நல்வசனத்தின் வல்லமையாய்
    வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
    எலியாவின் தேவன் எங்கே என்ற
    அற்புதம் நடந்திடுமே – 2(…என்றுறை செய்தவரை)