நம்பி வந்தேன் மேசியா
Lyrics: Clement Vedanayagam
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே (2)
- தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – (2) வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் - நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – (2) நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான் - நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – (2) அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான் - பாவியில் பாவியே
கோவியில் கோவியே – (2) கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான் - ஆதி ஓலோலமே
பாதுகாலமே – (2) உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்